மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம்பெண் முதல் தாயானவர்கள் வரை 22 பெண்கள்.. 19 வயது இளைஞனின் பதறவைக்கும் செயல்., அதிர்ந்துபோன அதிகாரிகள்.!
சமூக வலைதளத்தில் பெண்களின் புகைப்படத்தை திருடி மாபிங் செய்து, மீண்டும் அதனை சம்பந்தப்பட்ட பெண்களுக்கே அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டிய 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்த 40 வயது பெண்மணி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "எனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாலிபர் பணம்கேட்டு மிரட்டுகிறார்" என்று தெரிவித்துள்ளார். இதனைப்போல, பல பெண்கள் தனித்தனியே புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, மும்பை காவல் உதவி ஆணையர் அஸ்வினி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது. விசாரணையில், தகுந்த நபரை செல்போன் ஐ.டி மூலமாக கண்காணித்து பிரசாந்த் ஆதித்யா (வயது 19) என்பவரை கைது செய்தனர் இவரிடம் நடந்த விசாரணையில் பிரசாந்த் 22-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் பறித்தது உறுதியானது.
அதாவது, பெண்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ள போட்டோவை பதிவிறக்கம் செய்து, அதனை ஆபாசமாக சித்தரித்து பெண்களுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். உடனடியாக பணம் கொடுத்தால் ரூ.500 என்றும், தாமதம் ஆனால் ரூ.1000 என்றும் கொடுத்துள்ளனர்.
முன்னதாக ப்ரசாந்த்திடம் மர்ம கும்பல் நிர்வாண புகைப்படத்தை காண்பித்து மிரட்டி பணம் பறித்த நிலையில், அதனைப்போல தானும் செய்யலாம் என்று எண்ணி பணம் பறிக்கும் செயலில் இறங்கியது அம்பலமானது. மேலும், நேரடியாக தனது எண்ணுக்கு பணத்தை அனுப்பசொல்லாமல், நண்பர்களின் எண்ணுக்கு அனுப்ப வைத்துள்ளார்.
அவர்களும் விபரம் அறியாமல் பணத்தை மாற்றி கொடுத்துள்ளனர். 10-ம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுள்ள பிரசாந்த், மாஸ்க் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். பிரசாந்தை கைது செய்த அதிகாரிகள், அவரின் நண்பர்களுக்கு அறிவுரை கூறி கண்டித்து அனுப்பி வைத்தனர்.