கீரைக்கட்டுகளை சாக்கடை நீரில் சுத்தம் செய்த வியாபாரி.. வயிற்றை பிரட்டும் பகீர் வீடியோ வைரல்.!



Maharashtra Ulhasnagar a Vegetable Vendor Washing Spinach in Sewer Water 

 

கடைகளில் நாம் வாங்கும் காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து பின் சமையலுக்கு பயன்படுத்துவது நல்லது.

இன்றளவில் நாம் தினமும் அதிகம் வாங்கி சாப்பிடும் காய்கறிகளில் நாட்டு, ஹைபிரிட் என பல ரகங்கள் வந்துவிட்டன. அதேபோல, கீரை வகைகள் தினமும் சந்தைக்கு எடுத்து வரப்படுகின்றன. 

இதையும் படிங்க: சண்டையில் நண்பரின் காதை கடித்து விழுங்கிய நட்பு.. வாக்குவாதம் முற்றி பயங்கரம்.!

பெரு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் காய்கறிகள் முதல் நாள் பறிக்கப்பட்டு, பின் மறுநாளில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனிடையே, கீரை கட்டுகளை நபர் ஒருவர் கழிவுநீரில் அலசி வைக்கும் அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது.

கீரை பிரியர்களுக்கு ஷாக் ஏற்படுத்தும் வீடியோ, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை உல்காஸ்நகர் சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு கீரை கட்டுகளை விற்பனை செய்யும் இளைஞர், அதனை நேரடியாக கழிவு நீரில் நனைத்து எடுத்து வருகிறார். 

இவ்வாறான அவகேடான செயலை இளைஞர் மேற்கொண்ட நிலையில், அதனை கண்ட ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது வீடியோ வைரலாகி வரும் நிலையில், காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் கவனத்திற்கும் அவை சென்றுள்ளது.

இதையும் படிங்க: எக்ஸ் காதலியை பழிவாங்க நண்பர்களுடன் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. விபரீத எண்ணத்தால் கடத்தல், கற்பழிப்பு..!