திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தலித் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட மாஜிஸ்திரேட்.. போலீசார் வழக்கு பதிவு!
பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக மாஜிஸ்திரேட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கரோலி மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து கடந்த மார்ச் 27ஆம் தேதி அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கு கடந்த மார்ச் 30ம் தேதி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு வந்த போது அந்த பெண் ஆஜரானார். அப்போது விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் அந்த பெண்ணிடம் ஆடைகளை அவிழ்த்து காயங்களை காட்டுமாறு கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததால், வாக்குமூலத்தை மட்டும் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாஜிஸ்ட்ரேட்டுக்கு எதிராக பெண்ணை முறையின்றி அடைத்து வைத்தற்காகவும், வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.