எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் போடும் மம்தா பனர்ஜி..!!



mamata-banerjee-has-said-that-all-the-opposition-partie

2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் அனைத்தும் இணைந்து பா.ஜனதா கட்சிக்கு எதிராக போராட வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தா, மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி, எல்.ஐ.சி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டை அழித்து வருகிறது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசை வெளியேற்றுவதற்கு அனைத்து எதிர்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். அதிகாரத்தில் இருந்து பா.ஜனதா அரசை வெளியேற்றுவதன் மூலம், இந்த நாட்டு மக்களையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும்.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பா.ஜனதா கட்சிக்கும், இந்த நாட்டு மக்களுக்கும் இடையிலான போராட்டம். இந்த மாபெரும் போராட்டத்தில் பா.ஜனதாவை தோற்க்கடிக்க, அனைத்து எதிர்கட்சிகளும், அனைத்து மதத்தினரும் இணைய வேண்டும். இவ்வாறு மம்தா பனர்ஜி கூறியுள்ளார்.