மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரயில் விபத்தில் பலி.. இறுதிச் சடங்கில் உயிரோடு வந்த நபர்.! சினிமாவை மிஞ்சும் ஆச்சர்யம்!!
தெலங்கானா விகாராபாத் மாவட்டத்தில் நவாங்கி என்ற கிராமத்தை சேர்ந்தவர் 40 வயது நிறைந்த எல்லப்பா. இவரது மனைவி விமலா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். எல்லப்பா பஷீராபாத்தில் ஆடு, மாடுகளை மேய்க்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் விகாராபாத் ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கி தலை சிதைந்த நிலையில் நபர் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார்.
ரயில் விபத்தில் பலி
அவரது உடைமைகளை ஆய்வு செய்ததில் அவரிடம் இருந்த செல்போனை வைத்து உயிரிழந்தது எல்லப்பா என ரயில்வே போலீசார் அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரது குடும்பத்தினர்கள் கதறி துடித்துள்ளனர். மேலும் போலீசார் உயிரிழந்தவரின் உடலை காண்பித்த போது முகம் சிதைந்து அடையாளம் தெரியாததால் குடும்பத்தினர்களும் எல்லப்பா என முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பெயிண்ட் தொழிற்சாலை தீ விபத்தில் பரிதாபமாக பறிபோன உயிர்கள்.! தமிழக முதல்வர் இரங்கல்!!
இறுதி சடங்கு ஏற்பாடுகள்
பின்னர் அவருக்கு இறுதி சடங்குகள் செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் உறவினர் ஒருவர் தண்டூரில் எல்லப்பாவை கண்டுள்ளார். உடனே அவர் நடந்த அனைத்தையும் எல்லப்பாவிடம் கூறிய நிலையில் அதிர்ச்சியடைந்த அவர் உடனே தனது வீட்டிற்கு போன் செய்து தான் உயிருடன் இருப்பதாக கூறியுள்ளார்.
திருடு போன செல்போன்
மேலும் மூன்று நாட்களாக தண்டூர் ரயில் நிலையத்தில் கூலி வேலை செய்து வந்ததாகவும், தனது செல்போன் திருடு போய்விட்டதாகவும் கூறியுள்ளார். மறுநாளே இரயில் விபத்தில் அந்த திருடன் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து இறுதி சடங்குகள் நிறுத்தப்பட்டது. மேலும் எல்லப்பா குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்ட ரயில்வே போலீசார் உயிரிழந்தவர் குறித்து விசாரணை கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அலட்சியமாக தண்டவாளத்தை கடந்த ஐடி ஊழியர் இரயில் மோதி பலி; சென்னையில் சோகம்.!