53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
மிக கொடூர மலைப்பாம்பு!! கிணற்றில் இறங்கி மீட்க முயன்ற வனத்துறை ஊழியர்! வைரல் வீடியோ!!
கேரளா மாநிலம் திருச்சூர் அடுத்து பொராமங்கலம் எனும் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் மிகப்பெரிய மலைப்பாம்பு ஓன்று இருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு சென்ற அதிகாரிகள் பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
சாகில் என்ற வனத்துறை ஊழியர் ஒருவர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி பாம்பை பிடிக்க முயற்சித்துள்ளார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு பாம்பை பிடித்துக்கொண்டு சாகில் மேலே ஏற முயற்சித்தபோது பாம்பு சாகிலை சுற்றிவளைக்க ஆரம்பித்துள்ளது.
இருப்பினும், ஒரு கையில் பாம்பை பிடித்துக்கொண்டு, மறு கையில் கயிறை பிடித்துக்கொண்டு சாகில் மேலே ஏற முயற்சித்துள்ளார், கிணற்றின் விளிம்பு வரை அந்த அவர் நிலை தடுமாறி மீண்டும் பாம்புடன் கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். அதன்பிறகு, நீண்ட போராட்டத்திற்கு பிறகு சாகில் மீண்டும் அந்த மலைப்பாம்பை பிடித்துள்ளார்.
முதலில் கன்னி வைத்து அந்த பாம்பை பிடிக்க முயற்சித்தோம். ஆனால், கிணறு மிக ஆழமாக இருந்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. எனவே, கீழே இறங்கி பாம்பை பிடிக்க முயற்சித்தேன் என்று சாகில் கூறியுள்ளார்.