"எனக்கு பெண் கொடுத்த நீங்க நல்லவங்க.. ஆனா உங்க பொண்ணு.." திருமணமான 1 வருடத்தில் சோகம்.!! மணமகனின் துயர முடிவு.!!



man-commits-suicide-after-domestic-violance-leave-a-hea

ஆந்திர மாநிலத்தில் 1 வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்ட நபர் தற்கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கணவன் மனைவி சண்டை

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான நாள் முதலே அவரது மனைவி குமாரிடம் கடுமையாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதன் பிறகு இரு வீட்டாரும் மணமக்களை சமாதானம் செய்து சேர்ந்து வாழ வைத்துள்ளனர்.

India

உருக்கமான ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை

எனினும் கணவன் மற்றும் மனைவி இடையே ஏற்பட்ட சண்டை தீர்ந்தபாடில்லை. இதனால் குமார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். இந்நிலையில் தனக்கு பெண் கொடுத்த மாமனார் மற்றும் மாமியார் நல்லவர்கள். எனது தாய், தந்தை மன்னித்து விடுங்கள். என் மனைவியின் கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என வீடியோவில் உருக்கமாக பேசி அதனை வாட்ஸபில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து இருக்கிறார் குமார்.

இதையும் படிங்க: 35 வயது நபர் குத்தி படுகொலை.!! 16 வயது சிறுவன் வெறி செயல்.!! பதற வைக்கும் பின்னணி.!!

காவல்துறை விசாரணை

இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்ட குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு வருடத்திலேயே கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: "எப்படித்தான் மனசு வந்துச்சோ.." பிஞ்சு குழந்தைகள் கொலை.!! உயிர் பிழைத்த தாய்.!!