மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பசுவின் மடியை அறுத்த நபர்... இதுக்காகவா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க...
தன்னிடம் இருந்த பசுமாடு வேறு ஒரு நபருக்கு விற்றபின் அதிக பால் தருவதாக நினைத்த விவசாயி பசுவின் மடியை கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் சத்தியசாய் மாவட்டத்தில் உள்ள ஹிந்துபுரம் அருகே இருக்கும் ஸ்ரீ கந்தபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பைரப்பா . விவசாயம் செய்து வரும் இவர் தனது வீட்டில் பசு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். பைரப்பா வளர்த்து வந்த பசு சரியான அளவில் பால் தரவில்லை என்பதற்காக பைரப்பா அந்த பசுவை அதே கிராமத்தை சேர்ந்த வேறொரு நபருக்கு சமீபத்தில் விற்றுள்ளார்.
பசுவை வாங்கிய நபர் பசுவுக்கு முறையான அளவில் தீவனம் கொடுத்ததை அடுத்து அந்த பசு நன்றாக பால் கறந்துள்ளது. இதனை அறிந்த பைரப்பா, தன்னிடம் இருக்கும் போது குறைவான அளவில் பால் கொடுத்த பசு, தான் விற்பனை செய்தபிறகு அதிக பால் கொடுப்பதை அறிந்து மன வேதனை அடைந்துள்ளார்.
இதனால் பசு தன்னை ஏமாற்றி விட்டதாக மனதிற்குள் எண்ணிய பைரப்பா, பசுவை வாங்கிய நபரின் தோட்டத்திற்கு சென்று அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுவின் மடியை தான் வைத்திருந்த கத்தியால் வெட்டி உள்ளார். இதனால் வலியில் பசு அலறவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இதனைப் பார்த்து பைரப்பா அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
பசுவின் நிலையை பார்த்த மக்கள் அதற்கு முதலுதவி செய்ததோடு, அதனை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை வழங்கியுள்ளனர். மேலும் பைரப்பாவின் வீட்டிற்கு சென்று அங்கு வீட்டில் பதுக்கி இருந்த பைரப்பாவை தேடிப் பிடித்து தரும அடி கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வைரப்பாவின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.