மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞர்.! சில நொடிகளில் நேர்ந்த பரிதாபம்.! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!
ஐதராபாத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போலீஸ் கான்ஸ்டபிள் நொடிபொழுதில் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதாபராத் போவன்பல்லி பகுதியில் வசித்து வந்தவர் விஷால். 24 வயது நிறைந்த அவர் ஆசிஃப் நகர் காவல்நிலையத்தில் கான்ஸ்டபுலாக பணியாற்றி வந்துள்ளார். அவர் நாள்தோறும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அவ்வாறு இன்று காலையும் அவர் ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது அவர் திடீரென சரிந்து கீழே விழுந்து துடிதுடித்துள்ளார். இதனை கண்டு பதறிபோன அந்த ஜிம்மில் இருந்தவர்கள் அவரை அவசரமாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அங்கு விஷாலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விஷால் மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் பரவி பார்ப்போரை பதற வைத்துள்ளது.
Hyderabad: #Police constable dies of cardiac arrest during #workout at #gym . pic.twitter.com/Y7j8sXJtu5
— 4tv News Channel (@4tvhyd) February 24, 2023