தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ரோட்டில் கிடந்த ரூபாய் 10 லட்சத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்!
சூரத்தை சேர்ந்த துணிக்கடை ஊழியர் ஒருவர், ரோட்டில் பை நிறைய கிடைத்த ரூபாய் 10 லட்சத்தை போலிசார் உதவியுடன் பணத்தின் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார். இதனால் ஊழியருக்கு 2 லட்சம் வெகுமதி கிடைத்துள்ளது.
குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த போதர் என்பவர் உம்ரா பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை மதிய உணவை வெளியில் சாப்பிட்டுவிட்டு கடைக்கு திரும்பியுள்ளார்.
கடைக்கு செல்லும் வழியில் சாலையில் ஒரு கைப்பை கிடந்துள்ளது. அந்த பையினை எடுத்து திறந்து பார்த்தபொழுது வெறும் 2000 ரூபாய் நோட்டுகளாக 10 ரூபாய் பணம் இருந்துள்ளது. அதனைப் பார்த்து என்ன செயவதென்று தெரியாமல் அதிர்ச்சியாகியுள்ளார் போதர்.
உடனடியாக அவரது துணிக்கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு என்ன செயவதென்று கேட்டுள்ளார். அவரோ பணத்தை உன் கையிலே வைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் தகவல் அளிக்கும்படி கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பணத்தின் உரிமையாளரை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் பணத்தின் உரிமையாளரை காவல் துறையினர் கண்டறிந்தனர்.
பணத்தின் உரிமையாரோ, அந்தப் பகுதியில் இருக்கும் நகை கடை ஒன்றில் நகை வாங்குவதற்காக கொண்டு வந்த பணம் தான் அது என்பது கண்டறியப்பட்டது. சரியாக விசாரணை செய்தபின் காவல் துறையினர் பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
பணத்தை பெற்றுக் கொண்ட உரிமையாளர், பணத்தை திருப்பி கொடுத்த போதருக்கு வெகுமதியாக 1 லட்சம் ரூபாயை பரிசாக கொடுத்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் போதரின் நல்லெண்ணத்தை பாராட்டி நகைக் கடை உரிமையாளரும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். 2 லட்சத்துடன் மகிழ்ச்சியாக குடும்பத்துடன் கோலி பண்டிகை கொண்டாட கிளம்பிவிட்டார் போதர்.