மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீடியோ: பார்க்கவே பயங்கரமா இருக்கு!! 14 அடி நீள கொடிய ராஜநாகத்தை வெறும் கையில் பிடித்த நபர்!!
14 அடி நீள கொடிய ராஜநாகத்தை வெறும் கையில் அசால்ட்டாக பிடித்த நபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
பாம்புகள் என்றாலே கொடிய விஷம் கொண்டவையாகத்தான் இருக்கும். அதிலும் ராஜநாகம் என்றால் சொல்லவே தேவை இல்லை. உலகிலையே மிக கொடிய விஷம் கொண்ட பாம்புகளில் ஒன்றுதான் இந்த ராஜநாகம். அதன் தோற்றமே நமக்கு பயத்தை ஏற்படுத்தவும் அளவிற்கு பயங்கரமாக இருக்கும்.
அத்தகைய கொடிய ராஜநாகத்தை இளைஞர் ஒருவர் வெறும்கைகளால் அசால்ட்டாக பிடித்துள்ளார். தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள கிராபி எனும் மாகாணத்தில், ராஜநாகம் ஒன்று பனைத்தோட்டத்துக்குள் புகுந்துவிட்டதாக உள்ளூர்வாசிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
அதன்படி பாம்பு பிடிப்பதில் வல்லவரான 40 வயதுடைய Naewhaad, மாவட்ட நிர்வாகத்தினர் அனுப்பிய தன்னார்வலரான Ao Nang உடன் இணைந்து அங்கு சென்றிருக்கிறார். அங்கிருந்த செப்டிக் டாங் ஒன்றில் மறைந்துகொண்ட ராஜநாகத்தை Naewhaad போக்கு காட்டி திறந்தவெளிக்கு கூட்டிவந்து, பின்னர் அந்த ராஜநாகத்தை லாவகமாக பிடித்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
வெறும் கைகளில் ராஜ நாகத்தைப் பிடிக்கும் இளைஞர் - வைரலாகி வரும் வீடியோ #Thailand | #Snake | #ViralVideo pic.twitter.com/5Zjrvwo6wX
— Polimer News (@polimernews) January 29, 2022