"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
மனைவியை விவாகரத்து செய்து உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்.. நம்பிச்சென்ற இளம்பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.!
டெல்லி பரிதாபாத் பகுதியை சேர்ந்தவர் ஆசிப். 29 வயது நிரம்பிய இவர் பெயிண்டர் வேலை செய்துவந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்தநிலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெயின்டிங் வேலை செய்துவந்தநிலையில், அந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வீட்டுவேலை செய்துவந்த பெண்ணுடன் ஆசிப்பிற்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
ஆசிப் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆன தகவலை அந்த இளம்பெண்ணிடம் மறைத்துள்ளார். இந்தநிலையில் கடந்த 9-ம் தேதி அந்த இளம்பெண் இரவு பணியை முடித்து விட்டு வீடு திரும்பவில்லை. இது குறித்து, இளம்பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் கடந்த 12 ஆம் தேதி காட்டுப்பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடப்பதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அந்த குடியிருப்பு பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 9-ம் தேதி இரவு பணியை முடித்து விட்டு அந்த இளம்பெண் ஒரு ஆண் நபருடன் சென்றது தெரியவந்தது. மேலும், அந்த ஆண் நபர் ஆசிப் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ஆசிப்பை கைது விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி கடந்த 9-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஒரு தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு ஏற்கனவே திருமணமானதை ஆசிப் அந்த இளம் பெண்ணிடம் கூறியுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உன்னை திருமணம் செய்துகொள்வதாக அந்த இளம் பெண்ணிடம் ஆசிப் கூறியுள்ளார். இந்தநிலையில் ஆசிப்பின் வார்த்தையை நம்பிய அந்த இளம்பெண்ணை காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று தான் மறைத்து வைத்திருந்த கதியில் தாக்கி, அப்பெண்ணின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலைசெய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து ஆசிப்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.