#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அர்னால்டு பவர்.. ஐன்ஸ்டீன் மூளை! பெரிய ட்ரக்கில் அசால்டாக தக்காளி ஏற்றும் நபர்.! ட்ரெண்டாகும் வீடியோ!!
பல்வேறு துறையை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்களது வேலைகளை எளிதாக்க பல ஐடியாக்களை பின்பற்றி வருகின்றனர். அதுகுறித்த வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அந்த வகையில் தற்போது நபர் ஒருவர் தனது வித்தியாசமான உத்தியை பயன்படுத்தி பெரிய சரக்கு லாரியில் தக்காளி ஏற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அறுவடை செய்த தக்காளிகளை கூடையில் போட்டு வைத்த நிலையில் அங்கிருந்த நபர் ஒருவர் மின்னல் வேகத்தில் அந்த தக்காளி கூடையை லாரி நோக்கி வீசுகிறார். அதில் சிந்தாமல் சிதறாமல் தக்காளி முழுதும் லாரிக்குள் கொட்டுகிறது.
மூன்று பேர் செய்ய வேண்டிய அந்த வேலையை ஒற்றை ஆளாக அந்த நபர் செய்துள்ளார். இந்த வீடியோவை நெட்டிசன் ஒருவர் ''அர்னால்டின் பவரும் ஐன்ஸ்டின் மூளையும்'' என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் அந்த நபர் அறிவியல் யுக்தியை பயன்படுத்தியதாகவும், மைய விலக்கு விசையை புரிந்துகொண்டதாகவும் பகிர்ந்து வருகின்றனர்.
Awesome skills. See how this person manages to throw tomatoes and buckets in opposite directions. Some engineering here!#EIIRInteresting #engineering #skills
— Pareekh Jain (@pareekhjain) October 18, 2022
Credit: Unknown, ViaWeb pic.twitter.com/wqMv4ElRUs