மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கூலிப்படையை ஏவி, தன்னையே கொலை செய்யவைத்த நபர்! ஏன் தெரியுமா? வெளியான அதிர்ச்சி காரணம்!
டெல்லி ஆர்யா நகர் பகுதியில் வசித்து வருபவர் கவுரவ் பன்சால். இவர் அப்பகுதியில் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஷானு என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட நிலையில், மறுநாள் கவுரவ் கைகள் கட்டப்பட்ட நிலையில், மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் போலீசார் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கவுரவ்வின் செல்போனை ஆராய்ந்து பார்த்து, விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து குற்றவாளிகள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது. கவுரவ் பன்சாலுக்கு லட்சக் கணக்கில் கடன் பிரச்சினைகள் உள்ளது. இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான அவர் சிகிச்சைபெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் கொலைசெய்யப்பட்டால் தனது இன்சூரன்ஸ் பணம் குடும்பத்திற்கு கிடைக்கும் என எண்ணிய அவர், தானே பணம் கொடுத்து கூலிப்படை ஒன்றை ஏற்பாடு செய்து அவர்களுக்கு தனது புகைப்படத்தையே அனுப்பி கொலை செய்ய கூறியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனை கேட்டு போலீசாரே பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.