மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது வளர்ப்புமகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரௌடிக்கு பால் ஊற்றிய சோகம்; ஓடஓட விரட்டி நடந்த பயங்கர கொலை.!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரின் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினத்தில் 8 பேர் கொண்ட கும்பலானது ராஜாவை ஓட ஓட விரட்டி படுகொலை செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், குற்றவாளிகளாக அப்பகுதியை சேர்ந்த பிரகாஷ், தினேஷ், மணிகண்டன் மற்றும் தங்கமணி ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜாவின் வளர்ப்பு மகளை பிரகாஷ் காதலித்து வந்ததாக தெரிய வருகிறது. இந்த காதலுக்கு ராஜா கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே, தனது நண்பர்களுடன் சேர்ந்து ரவுடியாக வலம் வந்த ராஜாவை பிரகாஷ் படுகொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். விசாரணைக்கு பின்னர் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.