கூகுள் மேப்பை நம்பி காரில் போனவருக்கு நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி! உஷார் மக்களே!



Man struck in forest who traveled using google map

கூகுள் மேப்பை நம்பி நள்ளிரவில் காரை ஓடிச்சென்றவர் நடுகாட்டுக்குள் மாட்டிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

இன்று நம்மில் எல்லோருக்கும் பழக்கமான ஒன்றாக மாறிவிட்டது கூகுள் மேப். பஸ் பிடித்து ஊருக்கு போக யோசித்தவர் கூட, இன்று கூகுள் மேப் உதவியுடன் முன் பின் தெரியாத இடத்திற்கெல்லாம் தனி ஆளாக சென்றுவிட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு கூகுள் மேப் எளிதானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது.

ஆனாலும் சில நேரங்களில் கூகுள் மேப் உதவியுடன் பயணம் செய்பவர்களுக்கு சில சிக்கல்கள் எழதான் செய்கிறது. அந்த வகையில் மகாராஷ்ட்ராவின் புனேவில் இருந்து மத்திய பிரதேசத்தின் ஜபல்பூருக்கு நபர் ஒருவர் தனது பெற்றோருடன் காரில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

google map

முன் பின் அங்கு சென்றுவந்த அனுபவம் இல்லை என்றாலும், சுமார் 1000 கிலோ மீட்டர் பயணத்தை கூகுள் மேப்பின் மீது இருந்த நம்பிக்கையில் தொடங்கியுள்ளார். இப்படியே சென்றுகொண்டிருந்தவர் 700 கி. மீ தொலைவில் இருக்கும் நாக்பூரில் இரவு தங்கிவிட்டு செல்லலாம் என திட்டமிட்டுள்ளார். அப்படியே அமராவதி வழியே கார் சென்றுகொண்டிருந்தபோது மெயின் ரோட்டில் இருந்து கூகுள் மேப் டைவர்ஸன் காட்ட, கூகுள் மேப்பை நம்பி காரை திருப்பியுள்ளார் அந்த நபர்.

பாதை மிகவும் கரடு முரடகா இருந்த நிலையில் அந்த பாதையில் சுமார் ஒரு மணி நேரம் பயணம் செய்த பிறகுதான் அவருக்கு தெரிந்துள்ளது தாம் தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம் என்று. அதுமட்டும் இல்லாமல், அந்த பாதையில் இருந்த சிறிய பாலம் ஒன்று உடைத்திருந்தநிலையில் அந்த பாலத்தின் மீது காரை ஏற்ற முயற்சி செய்து, காரும் பாலத்தில் சிக்கிக்கொண்டது.

இதனை அடுத்து எப்படியோ முயற்ச்சி செய்து கார் மெக்கானிற்கு போன் செய்ய, அவர்கள் 80 கி.மீ தூரத்தில் இருந்து வந்து, நள்ளிரவு 2.30 மணியளவில் காரை மீட்டு கொடுத்துள்ளனர். அதன்பின் அந்த நபர் சரியான பாதையை கேட்டு தெரிந்து பின்னர் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.