மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விவசாயிகளின் வேதனை தாங்கமுடியவில்லை.! கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட மதகுரு.!
இந்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டம் 21 வது நாளை கடந்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில், அரியானாவின் கர்னால் மாவட்டத்தை சேர்ந்த சந்த் பாபா ராம் சிங் (வயது 65) என்ற சீக்கிய மதகுரு எல்லையில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு வந்துள்ளார். அங்கு வந்தவுடன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் சந்த் பாபா ராம் சிங்.
அவரது தற்கொலை கடிதத்தில், விவசாயிகளுக்கு அரசு அநீதி இழைப்பதாகவும், விவசாயிகளுக்கு ஆதரவாக தன் உயிரை தியாகம் செய்துகொள்ள முடிவுசெய்துவிட்டதாகவும். விவசாயிகளுக்கு ஆதரவளிக்க, சிலர் தங்கள் விருதுகளை அரசாங்கத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளனர், நான் என்னை தியாகம் செய்ய முடிவு செய்துள்ளேன் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
संत बाबा राम सिंह जी की आत्महत्या की ख़बर बेहद पीड़ादाई है। इस दुख की घड़ी में उनके परिवार के प्रति संवेदनाएं।
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 16, 2020
हमारा किसान अपना हक़ ही तो मांग रहा है, सरकार को किसानों की आवाज़ सुननी चाहिए और तीनो काले कानून वापस लेने चाहिए। pic.twitter.com/TWFpi47vCW
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சந்த் பாபா ராம் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “சந்த் பாபா ராம் சிங் ஜியின் தற்கொலை பற்றிய செய்தி வேதனையானது. இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் தங்கள் உரிமைகளை கேட்கிறார்கள். விவசாயிகளின் குரலை அரசாங்கம் கேட்க வேண்டும், மூன்று விவசாய சட்டங்களும் திரும்பப் பெறப்படவேண்டும் ”என பதிவிட்டுள்ளார்.