பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சற்றுமுன் ரூ.56,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி! முதல்வர் அறிவிப்பு!
சில நாட்களுக்கு முன்பு நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் வெற்றிபெற்ற மாநிலங்களில் யாரை முதல்வராக தேர்வு செய்வது என்பது குறித்து காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நீடித்தது. பின்னர் மூன்று மாநில முதல்வர்களை தேர்வு செய்யும் பொறுப்பு ராகுல்காந்தியிடம் வழங்கப்பட்டது.
சக்தி என்ற செயலி மூலம் தொண்டர்களின் கருத்தினை கேட்டு அதன் அடிப்படையில் மூன்று மாநில முதல்வர்களை தேர்வு செய்தார் ராகுலகாந்தி. அதில் மத்தியப் பிரதேச முதல்வராக கமல் நாத்தையும், ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெஹ்லாட்டையும், சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாஹலும் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் முதல்வர்கள் இன்று பதவியேற்றனர். அசோக் கெஹ்லாட் காலை 10 மணிக்கும், கமல் நாத் பிற்பகல் 2 மணிக்கும் பதவியேற்றனர். இந்த விழாவில் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தி.மு.க தலைவர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் குமாரசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத், தான் பதவியேற்ற அடுத்த 2 மணி நேரத்தில் அந்த மாநிலத்தில் விவசாயக் கடன் தள்ளுபடிக்கான தனது முதல் கையெழுத்தையிட்டார்.
இதுவரை விவசாயிகள் பெற்ற ரூபாய் இரண்டு லட்சம் வரையிலான கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர். இதன்மூலம் அந்த மாநிலத்தில் சுமார் 56,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.