திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
எம்.பி.பி.எஸ் பட்டம் வாங்கிய சில மணி நேரத்திலேயே மாணவனுக்கு நேர்ந்த துயரம்.! கதறி துடித்த குடும்பத்தினர்!!
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரியில் கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன் என்பவர் எம்.பி.பி.எஸ் படித்து வந்துள்ளார். இவர் கல்லூரிக்கு அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். இவரது தந்தை இத்தாலியில் பணிபுரிந்து வருகிறாராம்.
இந்நிலையில் அண்மையில் ஆதித் பாலகிருஷ்ணன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. அதில் அவர் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்று இரவு 11 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.அப்பொழுது பார்க்கிங் பகுதியில் அவரை விஷபாம்பு ஒன்று கடித்துள்ளது. ஆனால் பாம்பு கடித்ததை ஆதித் உணரவில்லை.
இந்நிலையில் வீட்டிற்குள் வந்ததும் அவர் திடீரென கீழே சுருண்டு விழுந்துள்ளார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆதித் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனனர்.
மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவன் ஆதித் பாலகிருஷ்ணன் உடலில் பாம்பு கடித்ததற்கான அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனையில் ரத்தத்தில் அதிகளவு விஷம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இச்சம்பவத்தால் மாணவனின் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதுள்ளனர்.