மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லிவிங் டுகெதர் காதலனை 8 பேருடன் வச்சு செய்த காதலி.. இப்படியுமா இருப்பாங்க??.. வினோத சம்பவம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள அனுமந்தநகரில் வசித்து வருபவர் மகாதேவ் (வயது 28). இவர் டேட்டிங் செயலியை உபயோகம் செய்து வந்த நிலையில், அதன் மூலமாக இளம்பெண்ணுடன் பழகி உள்ளார். இதன் பின்னர் இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் கணவன் - மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர்.
அப்போது இவர்களுக்குள் பிரச்சனை ஏற்படவே இருவரும் பிரிந்துள்ளனர். இந்த நிலையில், மகாதேவை தொடர்புகொண்ட இளம்பெண் கடைசியாக உன்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசையாக பேசியுள்ளார். இதனைகேட்டு மகாதேவ் வீட்டிற்கு சென்றபோது, அங்கு இளம்பெண், அவரின் தோழி மற்றும் 6 நண்பர்கள் என அனைவரும் சேர்ந்து அவரை காரில் கடத்திச்சென்று சரமாரியாக திரைப்பட பாடல் தாக்கியுள்ளனர்.
பின்னர் அவரை நடுவழியில் இறக்கி விட்டு சென்றுவிடவே, தட்டு தடுமாறிய நிலையில் வீட்டிற்கு வந்த மகாதேவ் அனுமந்தநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்னாள் காதலி உட்பட 8 பேரை கைது செய்தனர்.
பொதுவாக லிவிங் டுகெதர் மூலமாக கிடைக்கும் நட்பில் இறுதியில் யாரோ ஒருவர் கொலை செய்யப்படுவார்? அல்லது இருவரும் பிரிந்து விடுவார்கள்? என்று இருந்த நிலையில், காதலனை விட்டுச் சென்ற பெண்மணி தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை போலந்துகட்டிய சம்பவம் டேட்டிங் செயலியை விரும்புவோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.