#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொரோனாவால் நடுங்கிவரும் உலகநாடுகள்! சுரேஷ் ரெய்னாவை பாராட்டிய பிரதமர் மோடி!
கொரோனா வைரஸ் பாதிப்புக்காக 52 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, முக்கிய பிரமுகர்கள் பலர் மத்திய, மாநில அரசுகளின் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.
That’s a brilliant fifty, @ImRaina! #IndiaFightsCorona https://t.co/O6vY4L6Quo
— Narendra Modi (@narendramodi) March 28, 2020
இந்தநிலையில், இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமரின் நிவாரண நிதி மற்றும் உ.பி. மாநில அரசின் நிவாரண நிதிக்கு 52 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்காக 52 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.