தமிழே தெரியாது, ஆனால் பாடல் மட்டும் தெரியும் - சிறுமியின் நெகிழ்ச்சி பாட்டு.. வீடியோ வைரல்.!
டெல்லி தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவு!
டெல்லியில் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று வந்தது.
நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால், மூன்றாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க உள்ளது. 70 தொகுதிகளில் ஆம்ஆத்மி 62 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.
Congratulations to AAP and Shri @ArvindKejriwal Ji for the victory in the Delhi Assembly Elections. Wishing them the very best in fulfilling the aspirations of the people of Delhi.
— Narendra Modi (@narendramodi) February 11, 2020
இந்தநிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஜிக்கு வாழ்த்துக்கள். டெல்லி மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வாழ்த்துக்கள்" என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.