மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
4 மாத பெண் குழந்தையை ரூ.100க்கு விற்ற கொடூர தாய்.! அதுவும் எதற்காக?? அதிரவைக்கும் பின்னணி!!
கர்நாடக மாநிலம் கொப்பல் தாலுகா, உலிகி கிராமத்தில் 25 வயது நிறைந்த பெண் ஒருவர் பிச்சையெடுத்து தனது பிழைப்பை நடத்தி வந்துள்ளார். அந்த பெண் மண்டபங்களிலும், சாலையோரத்திலும் நின்று பிச்சையெடுத்து வந்துள்ளார். மேலும் ரோட்டோரமே சுற்றி திரிந்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன் பெண்குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில் அவரிடமிருந்து அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குழந்தையை விலைக்கு வாங்கியுள்ளார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு தெரியவந்த நிலையில் அவர்கள் அந்த பெண்ணை சந்தித்து பேசியுள்ளனர். பின்னர் விற்கப்பட்ட குழந்தையை மீட்டு கொப்பல் மாவட்ட குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து அதிகாரிகள் குழந்தையை விற்றதை குறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்தப் பெண்ணுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாகவும், மது அருந்த தன்னிடம் பணம் இல்லாததால் அவர் நான்கு மாத குழந்தையை வெறும் 100 ரூபாய்க்கு விற்றதாகவும் தெரிய வந்துள்ளது. சற்று மனநலம் பாதிக்கப்பட்டது போல் இருக்கும் அந்த பெண் மற்றொரு குழந்தையையும் விற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் குழந்தையின் தாயிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.