#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மகளுடன் ஆற்றில் குதித்து தாய் தற்கொலை.! செல்போனை சோதனையிட்ட போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
கார்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் வசித்து வருபவர் மஞ்சுளா. இவருக்கு 19 வயது நிறைந்த சௌமியா என்ற மகள் உள்ளார். இருவரும் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால் அவர்கள் சென்று வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பதறிப்போன அவர்களது குடும்பத்தார்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து போலீசார் காணாமல் போன இருவர் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, கபிலா ஆற்றில் இரு பெண்களின் சடலங்கள் மிதப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனை தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் ஆற்றில் மிதந்த சடலங்கள் மஞ்சுளா மற்றும் அவருடைய மகள் சௌமியா என அடையாளம் கண்டனர்.மேலும் இருவரும் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து இருவரின் உடலையும் மீட்ட போலீசார் அதனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் அவர்களது தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் அப்பகுதியில் கிடந்த அவர்களது செல்போனை சோதனை செய்தபோது, அவர்கள் இருவரும் தற்கொலைக்கு முன் கடையாக செல்பி எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.