மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலருடன் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டு கடத்தல் நாடகம்; பணத்திற்காக பாசமகள் கபடநாடகம்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிவபுரி பகுதியை சேர்ந்தவர் காவ்யா தாகத் (வயது 20). இவர் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டாவில் தங்கியிருந்து நீட் தேர்வுக்காக பயின்று வருகிறார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி காவ்யா தனது கை-கால்கள் கட்டியிருத்தவாறு தந்தையின் செல்போனுக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பினார். மேலும், அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.30 இலட்சம் பணமும் பேரம் பேசி தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனைக்கண்டு அதிர்ந்துபோன பெற்றோர், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், காவியா ஏமாற்றியது தெரியவந்தது. இளைஞர் ஒருவருடன் காதல் வயப்பட்ட காவியா, கோட்டாவில் நீட் தேர்வுக்காக படிக்கச்செல்வதாக கூறி புறப்பட்டு சென்றுள்ளார். பின் அங்கிருந்து காதலருடன் வெளிநாடு தப்பிச்செல்ல, வீட்டில் பெற்றோரிடம் பணம் கோர இவ்வாறான செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
ராஜஸ்தானில் இருப்பதாக கூறிய பெண்மணி, இந்தூரில் தான் அறையெடுத்து தங்கி இருந்துள்ளார். தான் தேடப்படுவதை அறிந்த காவியா காதலருடன் ஓட்டம்பிடித்துள்ளார். இதனால் அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும், பெண் குறித்த தகவல் தருவோருக்கு அல்லது அவரை கண்டுபிடிக்க உதவுவோருக்கு ரூ.20 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.