திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
37 வயது பெண்ணை இரண்டு துண்டாக வெட்டிக்கொன்ற 60 வயது கிழவன்; பலாத்காரம் நிறைவேறாததால் கொடூரம்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர் கமலேஷ் படேல் என்பவர், நேற்று 37 வயதுடைய பெண்ணை பெண்ணை கொலை செய்து, உடலை இரண்டு துண்டாக வெட்டி 2 ரயில்களில் வீசிவிட்டு தப்பிச்சென்ற புகாரில் கைது செய்யப்பட்டார்.
இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் கூறுகையில், ஜூன் 06ம் தேதி கணவரிடம் சண்டையிட்ட 37 வயது பெண்மணி, மதுரா செல்வதற்காக உஜ்ஜைன் இரயில் நிலையத்திற்கு வந்து தனியே இருந்துள்ளார். இதனை கவனித்த முதியவரான கமலேஷ், பெண்ணிடம் ஆறுதலாக பேசி, உணவு சாப்பிடுமாறு தூக்க மாத்திரை கலந்த உணவை வழங்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: பச்சிளம் குழந்தைகளை சீரழிப்பது எப்படி? - பெண் யூடியூபரின் அதிர்ச்சி பேச்சு.. அதிரடி கைது.!
பலாத்காரம் தோல்வியடைந்ததால் கொலை
பின் அவரை மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று பலாத்காரம் செய்ய முயற்சிக்க, பெண்ணுக்கு நினைவு திரும்பியதால் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து பெண்ணை கொலை செய்தவர், வழக்கில் இருந்து தப்பிக்க, உடலை இரண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு திசையில் செல்லும் இரயிலில் வீசி இருக்கிறார்.
அதன்படி, பெண்ணின் கால், கைகள் இந்தூர் - நகிடா இரயிலில், இந்தூர் - டேராடூன் இரயிலில் பிற உடல் பாகங்கள் துண்டு துண்டாக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகார், பெண்ணின் உடல் மீட்கப்பட்டது குறித்து அதிகாரிகள் தனித்தனியே விசாரணை நடத்தினர்.
பின் சந்தேகத்தின் பேரில் கணவரை அழைத்து உடலை அடையாளம் காண அறிவுறுத்தியபோது சோகம் அம்பலமானது. இதற்குப்பின் இக்கொடூர குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, நேற்று காமலேஷை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: சமூக வலைத்தளத்தில் பழக்கம்; மைனர் சகோதரிகள் பலாத்காரம்.. வீடியோ எடுத்து பகிரங்க மிரட்டல்.!