பட்டத்தின் கயிறு கழுத்தை அறுத்து காவலர் பரிதாப பலி: வீட்டிற்கு திரும்பியபோது நடந்த சோகம்.!



Mumbai Cop Died After Kite Loom Cut Throat 


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, ஒர்லி பகுதியைச் சார்ந்த காவல் அதிகாரி சமீர் சுரேஷ் யாதவ் (வயது 37). இவர் அங்குள்ள கோரேகான் தின்தோசி காவல் நிலையத்தில் கடைநிலைக் காவலராக வேலை பார்த்து வருகிறார். 

நேற்று இவர் வேலை முடிந்து மேற்கு அதிவிரைவு சாலையில் உள்ள பக்கோடா பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அச்சமயம் அங்கு கைவிடப்பட்ட பட்டத்தில் இருந்த நூல் ஒன்று அவரது கழுத்தில் சிக்கி இருக்கிறது. 

இதனால் கழுத்து அறுக்கப்பட்டு நடுரோட்டில் வாகனத்தில் இருந்து தவறிவிழுந்த காவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த கேர்வாடி காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து காவலரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.