#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பச்ச பிள்ளையை சிதைச்சிடீங்களேடா.. 15 வயது சிறுமி, 33 பேரால் 9 மாதமாக கூட்டுப்பாலியல் பலாத்காரம்.!
9 மாதமாக 15 வயது சிறுமி 33 பேரால் பல்வேறு இடங்களில் வைத்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்த புகார் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை டோம்பிவிலி, மண்படா காவல் நிலையத்தில் 15 வயது சிறுமி, தன்னை பலர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுமி தெரிவித்த தகவலின் அடிப்படையில் சுமார் 121 பேரிடம் விசாரணை நடத்தி, 33 பேரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில், அதிர்ச்சிதரும் விஷயமாக சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததாக 33 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 9 மாதமாக சிறுமி பெரும் கொடூரத்திற்கு உள்ளாக்கப்பட்டு சிதைக்கப்பட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த செப். மாதம் 23 ஆம் தேதி சிறுமி சமூக ஆர்வலர்கள் உதவியுடன் மண்படா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரிலேயே விசாரணை நடத்தி, அதிகாரிகள் 885 பக்க விசாரணை அறிக்கையை தயார் செய்து கல்யாண் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி 29 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 22 ஆம் தேதி வரை சிறுமி டோம்பிவிலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வைத்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த 33 பேரில் பல சிறார்களும் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டோம்பிவிலி, பாடலாப்பூர், ரபாலே மற்றும் முர்பாத் போன்ற 6 க்கும் மேற்பட்ட இடங்களில் வைத்து சிறுமி கூட்டுப்பலியால் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். காவல் துறையினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை 45 நாட்களில் தாக்கல் செய்துள்ள நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள சிறார்கள் முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.