தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
'கெத்து காட்டும் குடிசை வாசிகள்' கொரோனா எதிர்ப்பு சக்தி அதிகம்; ஆய்வில் தகவல்.!
இந்தியா முழுவதும் இன்றைய நிலையில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. பெருநகரங்களில் தொடங்கி கிராமங்கள் வரை
நெருங்கியுள்ளது. அதேவேளையில் நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் மும்பை மாவட்டத்தில் நேற்று 7,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 4000 முதல் 4500 பேர் வரை சேரிப் பகுதியில் உள்ள மக்கள். ஏனெனில் சேரிப் பகுதியில் வீடுகள் நெருக்கமாகவும் குறுகிய இடத்தில் மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிப்பார்கள். இதனால் இங்கு எளிதில் கொரோனா பரவி இருக்குமோ என்ற அச்சத்தில் அவர்களை மையப்படுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இச்சோதனையை மும்பை மாநகராட்சி பணியாளர்கள், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரீசர்ச், நிதி அயோக் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தியது. இச்சோதனை முடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஏனெனில் சேரியில் வசிக்கும் மக்களில் 57 சதவீதம் பேருக்கு இயற்கையாகவே அவர்களது உடலில் குரோனா எதிர்ப்புசக்தி இருந்தது. சேரியில் அல்லாத பகுதியில் வசிக்கும் மக்களில் 16% பேருக்கு மட்டுமே எதிர்ப்புசக்தி இருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிகழ்வு நாட்டில் 60 சதவீதம் பேருக்கு கொரோன தொற்று ஏற்பட்டவுடன் அவர்களது உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி விடும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்ததை நினைவுபடுத்துகிறது.