மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு கோர விபத்து.. 100 பேர் நிலை என்ன?.. பரிதவிக்கும் உறவினர்கள்.!
பச்சை மாணிக்க கற்கள் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மண்ணில் புதைந்துள்ளனர். 25 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மியான்மரில் உள்ள வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் கச்சின் மாகாணம், ஹாபகந்த் இடத்தில் பச்சை நிற மாணிக்க கற்களை வெட்டியெடுக்கும் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதி சீனா எல்லைப்பகுதி அருகே அமைந்துள்ளது. சுரங்கத்தில் பல தொழிலாளர்கள் மாணிக்க கற்களை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை நேரத்தில் சுரங்கத்திற்குள் பணியாளர்கள் வேலையை பார்த்துக்கொண்டு இருந்த போது, திடீரென நிலம் சரிந்து விழுந்துள்ளது. சுரங்கத்திற்குள் இருந்த பணியாளர்களின் மீது மண் சரிந்து அமுக்கியுள்ளது. இந்த தகவலை அறிந்த மீட்பு படையினர் 200 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக 25 தொழிலாளர்கள் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 1 நபர் மட்டும் பிணமாக மீட்கப்பட்டார். நிலச்சரிவில் மேலும் 100 பேர் வரை சிக்கியிருப்பதாக தெரியவந்துள்ளதால், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், மீட்பு பணிகளை தாமதப்படுத்தும் விதமாக மண் தொடர்ந்து சரிந்து வருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.