3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
கால்நடைகளுக்குப் பரவும் மர்ம நோய்... கொத்துக் கொத்தாக செத்து மடியும் கொடூரம்..!
ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் ஒருவித மர்ம நோய் தாக்கி கால்நடைகள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்து வருகின்றன.
ராஜஸ்தான், குஜராத்தில் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளும், பஞ்சாப்பில் 400-க்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. இத அந்த மாநிலங்களில் கால்நடை வளர்ப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் இந்த மர்ம நோயை கட்டுப்படுத்த மிகப்பெரிய அளவிலான தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், கால்நடைகளை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்களின் அமெரிக்க சங்கத்தின் தலைவர் ரவி முரார்கா கூறியுள்ளார்.
வட அமெரிக்காவின் ராஜஸ்தான் சங்கத்தின் கால்நடை பராமரிப்புத்துறை தலைவராகவும் இவர் இயங்கி வருகிறார். மேலும் இவர் ராஜஸ்தானில் நிலைமை மோசமாக உள்ளது என கூறியுள்ளார். இந்த நோயை கட்டுப்படுத்துவது மற்றும் அதற்கான தடுப்பூசிகளை இந்தியாவுக்கு விரைவாக அனுப்புவது பற்றி நிபுணர்களுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாகவும் முரார்கா கூறியுள்ளார்.