மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Covid 19 பரவலை தடுக்க இந்த முககவசம் சிறப்பாக செயல்படுகிறது.. இந்திய விஞ்ஞானிகள் அறிவிப்பு.!
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்றானது வேகமாக பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நோயிலிருந்து மக்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா பரவலை தடுக்க உதவும் தடுப்பூசிகளை கண்டுப்பிடிப்பதிலும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்திய விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதாவது கொரோனா பரவலை தடுப்பதில் N95 மாஸ்க் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த என்95 மாஸ்கானது மற்ற மாஸ்க்கை போல் இல்லாமல் நோய் பரவலை தடுப்பதில் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறியுள்ளனர்.