திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை.. வரலாறு காணாத சோதனை.! 106 பேர் கைது.! தமிழகத்திலும்
பயங்கரவாத நடவடிக்கைக்கு பண உதவி செய்தல் மற்றும் பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது தொடர்பான புகாரில் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். நடத்தப்பட்ட சோதனைகளில் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கைதான 10 பேரும் அவர்களில் அடங்குவர்.
நாட்டில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற ஆதரவு அளித்ததாகக் கூறப்பட்டதையடுத்து "பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா" என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைதானதாக தேசிய புலனாய்வு முகவை அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனையில் கேரளாவில் 22 பேரும், மகாராஷ்டிராவில் 20பேரும், கர்நாடகாவில் 20பேரும், தமிழகத்தில் 10பேரும், அசாமில் 9 பேரும், உத்திரப் பிரதேசத்தில் 8பேரும், ஆந்திராவில் 5பேரும் , புதுச்சேரியில் 3பேரும், டெல்லியில் 3பேரும், ராஜஸ்தானில் 2பேரும் என பலர் சிக்கியுள்ளனர்.
இந்தநிலையில், என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐயினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற பெரிய அளவில் சோதனை இப்போதுதான் நடக்கிறது என்று அதிகாரிகள் கூறினர்.