மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆச்சரியம் ஆனால் உண்மை... அனைவரையும் மிரள வைத்த பச்சிளம் குழந்தை... இறந்த குழந்தை திடீரென அழுததால் பரபரப்பு!!
அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவரது கணவர் அதே மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளார். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் தாய், சேய் இருவரில் ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என கூறியுள்ளனர்.
அதன்பின் தாய் நலமாக இருப்பதாகவும் குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டதாகவும் கூறி இறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் வைத்து அவரது தந்தையிடம் கொடுத்துள்ளனர் மருத்துவர்கள். குழந்தையின் குடும்பத்தினர் இறந்த குழந்தையை வீட்டிற்கு சென்று புதைப்பதற்காக வெளியே எடுத்துள்ளனர்.
அப்போது திடீரென குழந்தை அழுத்துள்ளது. இதை கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போய் உடனே குழந்தையை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். தற்போது குழந்தை நலமாக உள்ளது. இதனிடையே குழந்தை இறந்து விட்டதாக கூறிய மருத்துவமனை நிர்வாகத்தின் பெயரில் நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.