மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதெல்லாம் செய்யாதீங்க; சீக்கிரம் வந்தாலே போதும்! ஏர் இந்தியா ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய உத்தரவு!
சுமார் 69 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா விமான சேவை டாடா குழுமத்தின் கைவசம் வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஏர் இந்தியா விமானம் தாமதமாகப் புறப்படுவது, உணவுச் சேவை குறித்து தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. அதனை சரி செய்யும் வகையில் பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்களுக்கு தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பயணிகள் விமானங்களில் ஏறும்போது பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் சாப்பிடுவதோ அல்லது பானங்கள் அருந்துவதோ கூடாது. பயணிகளை உரிய இருக்கைகளை காட்டி அமர உதவ வேண்டும். அதிக மேக்கப் போடக்கூடாது. குறைந்த நகைகளை மட்டும்தான் அணிந்து வரவேண்டும்.
மேலும் விமான நிலைய சுங்க மற்றும் பாதுகாப்பு பரிசோதனைகளை விரைவாக முடித்துக் கொண்டு, தாமதமின்றி பணிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.