இது சூப்பர் விஷயமாச்சே! குழந்தையுடன் பயணம் செய்பவர்களுக்காக புதிய ஐடியா.! ரயில்வேயின் அசத்தலான முயற்சி.!



new-small-seat-attached-for-kids-in-train

ரயில்களில் குழந்தைகளுக்கும் பர்த் சீட் அமைக்கும் முயற்சியை வடக்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் பச்சிளம் குழந்தையுடன் பயணம் செய்யும் பெண்கள் படுக்கையில் தூங்குவதற்கு பெருமளவில் சிரமப்படுவர். பெரும்பாலும் குழந்தையை கையில் வைத்துக்கொண்டும், மடியில் படுக்க வைத்துக்கொண்டுமேதான் செல்வர்.

Birth

இந்த நிலையில் ரயில்களில் தாயுடன், குழந்தையும் படுத்து தூங்கும் வகையில் புதிய படுக்கை வசதியை ஏற்படுத்தும் வகையில் வடக்கு ரயில்வே "லக்னோ மெயில்” ரயிலில்  புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி வழக்கமான படுக்கைக்கு அருகே குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக சிறிய அளவிலான சீட் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் சீட்டிலிருந்து குழந்தை உருண்டு விழாமல் இருக்கும் வகையில் இரும்பு கம்பியும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த முயற்சிக்கு பயணிகள் மத்தியில் அதுவும் பெண் பயணிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இதனை நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்களிலும் விரைவில் அமல்படுத்தவும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.