விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!
மக்களே உஷார்... கொசுக்களால் பரவும் புதிய வகை வைரஸ்!! அறிகுறிகள் என்ன தெரியுமா.?
பெங்களூருவில் உள்ள தலகயலபேட்டா கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சேகரிக்கப்பட்ட கொசு மாதிரிகளை பரிசோதனை செய்ததில் ஜிகா என்னும் புதிய வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
ஏடிஸ் வகை கொசுக்கள் மூலமாக ஜிகா வைரஸ் பரவுகிறது . இதனை தடுக்க இதுவரை தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறப்பு சிகிச்சைகளும் இதுவரை எதுவும் இல்லை. எனவே மக்கள் தங்களை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைப்பதுடன், பாதுகாப்பாகவும் இருக்க வழியுறுத்தப்படுகிறது.
மேலும் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டால் உடலில் இந்த வகையான மாற்றங்கள் ஏற்படும். அதாவது தோலில் தடிப்புகள், காய்ச்சல், வயிற்று உபாதை, தசை, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஜிகா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகளாகும்.