#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்தியாவில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ்.? மத்திய அரசு கொடுத்த விளக்கம்.!
சீனாவில் உருவாகி உலகம் முழுவதையும் தாக்கி, பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் ஆல்பா, பிட்டா, டெல்டா, ஒமைக்ரான் என பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. தற்போது உலகின் பல பகுதிகளில் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அந்த ஒமைக்ரான் வைரஸ் மேலும் உருமாற்றமடைந்துள்ளது. இந்த புதிய வகை உருமாற்றத்திற்கு ’எக்ஸ்இ’ வகை வைரஸ் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
இந்த ‘எக்ஸ்இ’ வைரஸ் முதன்முதலில் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எக்ஸ்இ உருமாறிய வைரஸ் ஒமைக்ரான் வகையிலேயே மிகவும் வேகமாக பரவக்கூடியது. இந்தநிலையில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு வந்த ஒருவருக்கு ’எக்ஸ்இ’ வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக மும்பை மாநகராட்சி நேற்று தெரிவித்தது.
இந்த நிலையில், மும்பையில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று மாதிரியை மரபணு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் உடலில் எடுக்கப்பட்ட வைரஸின் மரபணு அமைப்பு, ‘எக்ஸ்இ’ வகை மாறுபாட்டின் மரபணு அமைப்புடன் ஒத்துப்போகவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து மும்பையில் கண்டறியப்பட்டது உருமாறிய ‘எக்ஸ்இ’ கொரோனா தொற்று இல்லை எனவும், பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.