மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரூ. 60 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களுடன் நைஜீரிய நாட்டவர் கைது! சினிமாவை மிஞ்சும் சேஸிங்..!
மும்பையில் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த நைஜீரிய நாட்டவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை நகரம் ஹொரிகன் நகரில், மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு, சிலர் போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் நேற்று காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த நைஜீரியாவை சேர்ந்த தைவொ அயொடொலி சம்சன் என்ற நபரை பிடித்தனர்.
அந்த நபரிடம் சோதனை செய்தபோது. அந்த நபர் மறைத்து வைத்திருந்த 400 கிராம் போதைப்பொருள் காவல்துறையினர் கைக்கு சிக்கியது.
இதையடுத்து, நைஜீரியர் சம்சனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 60 லட்ச ரூபாய் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.