மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் அமலாகிறது இரவு நேர ஊரடங்கு?.. அதிகரிக்கும் கொரோனவால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.!
இந்தியாவில் மீண்டும் படிப்படியாக கொரோனா வைரஸ் தாக்கமானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று ஒரே நாளில் 1591 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மொத்தமாக சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை 8601 ஆகியுள்ளது.
சுமார் 146 நாட்களுக்குப் பின்னர் இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 1591 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் தீவிரப்படுத்தப்படலாம் என்று தெரிய வருகிறது.
மேலும், ஏற்கனவே முக கவசம், தனிநபர் இடைவெளி போன்றவற்றை மீண்டும் கடைப்பிடிக்குமாறு மாநில அரசுகள் சார்பில் முக்கிய நகரங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல மத்திய அரசு தமிழ்நாடு, மகாராஷ்டிரா உட்பட பல இந்திய மாநிலங்களை கொரோனா பரிசோதனைகளை கூடுதலாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கிறது.