மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா., என்ன குளூரு..! வடமாநிலங்களை புரட்டியெடுக்கும் கடும் குளிர்.!
தென்மேற்கு பருவமழை இந்தியாவுக்கு நடப்பு வருடத்தில் விடைகொடுத்துள்ள நிலையில், வடக்கு மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலத்தில் குளிர்காலம் தொடங்கியுள்ளது. டெல்லி, உத்திர பிரதேசம், உத்திரகன்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலத்தில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.
அம்மாநிலங்களில் நிலவும் பனிமூட்டம் காரணமாக மக்கள் வெளியே வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இராஜஸ்தான் போன்ற மாநிலத்தில் வெப்பநிலை மைனஸ் என்ற நிலைக்கு சென்றுள்ளதால், மக்கள் கடுமையான குளிரால் அவதிப்பட்டு வருகின்றனர்.
அங்குள்ள, மேற்கு இராஜஸ்தான் மாநிலத்தின் சுரு நகரில், நேற்று -1.1 டிகிரி வெப்பநிலை பதிவானது. இமாச்சல பிரதேசம், ஹரியானா, சண்டிகர், டெல்லி, மேற்கு உத்திரபிரதேசம் போன்ற பகுதிகளில் -1.6 முதல் -3.0 குளிர் பதிவானது.