மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாத்ரூமில் தனக்கு தானே பிரசவம்.! பிய்ந்து கையோடு வந்த கால்கள்.! இளம்நர்ஸ் செய்த அதிர்ச்சி காரியம்!!
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வினிஷா. 24 வயது நிறைந்த அவர் நர்சிங் படிப்பை முடித்த நிலையில் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் 29 வயது நிறைந்த செல்வமணி என்பவருடன் காதல் வயப்பட்டு நெருங்கி பழகியுள்ளார். செல்வமணி மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர்.
இந்த நிலையில் கர்ப்பமடைந்த வினிஷா சொந்த ஊருக்கு செல்லாமல் தனியாகவே வசித்து வந்துள்ளார். 7 மாத கர்ப்பிணியான அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தான் ஒரு நர்ஸ் என்பதால் அவரே பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளார். பாத்ரூமிற்குள் சென்று அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சுயமாக பிரசவம் பார்த்துக் கொள்வது அவருக்கு எளிதாக இல்லை.
வலியும் அதிகரித்த நிலையில் பொறுத்துக் கொள்ள முடியாத அவர் பெரும் அவஸ்தை பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு சிசுவின் கால் தட்டுப்பட்ட நிலையில் அவர் அதனை பிடித்து வேகமாக இழுத்துள்ளார். ஆனால் இதில் குழந்தையின் கால் பிய்ந்து விட்டது. மேலும் குழந்தையும் பேச்சு மூச்சின்றி வெளியே வந்து விழுந்துள்ளது. இந்நிலையில் அவர் குழந்தையின் காலை பாத்ரூமில் வீசிவிட்டு, குழந்தையை தூக்கிக்கொண்டு சென்னை எழும்பூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் வினிஷாவின் உடல்நலமும் மிகவும் மோசமாக இருந்த நிலையில் அவருக்கும் அங்கேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவலளித்த நிலையில் அவர்கள் வினிஷா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரது காதலனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.