கால்வலியால் கட்டிங் கேட்ட நோயாளிக்கு கம்பெனி கொடுத்த அவசரஊர்தி ஓட்டுநர்.. ஊத்திக்கொடுத்து குடித்து ஜமாய்... பகீர் வீடியோ வைரல்..!
சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய நோயாளி மதுபானம் கேட்டு தொந்தரவு செய்த காரணத்தால், அவசர ஊர்தி ஓட்டுநர் மதுவை ஊற்றிக்கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜகத்சிங்பூர் பகுதியில் உள்ள டிர்டோல் பகுதியில், அவசர ஊர்தியின் ஓட்டுநர் சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு நோயாளிக்குக்கு மதுபானம் ஊற்றி கொடுத்து இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
மதுபானத்தை வாங்கிய நோயாளியோ காலில் கட்டுபோடப்பட்டு இருந்த தருணத்திலும், படுத்தவாறு மதுபானம் அருந்தினார். கூடுதல் மதுபானம் கேட்டபோது, அதனை அவசர ஊர்தி ஓட்டுனரும் குடிக்க வழங்கினார். ஓட்டுனரும் மதுபானம் அருந்தினார். இந்த நிகழ்வின்போது நோயாளியோடு பெண், சிறுவன் இருந்தனர்.
சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ வைரலானதை தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, நோயாளி நகுலே மரத்தில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார். சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருக்கும்போது, மதுபானம் கேட்டு ஓட்டுனரை தொந்தரவு செய்துள்ளார்.
ஒருகட்டத்தில் வாகனத்தை இயக்கவிடாமல் மதுபானம் கேட்டு நகுலே தொந்தரவு செய்த காரணத்தால், நோயாளிக்கு மது ஊற்றிக்கொடுத்த ஓட்டுநர், தானும் அதனை குடித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக ஆர்.டி.ஓ. மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுநலன் கருதி வீடியோ இணைக்கப்படவில்லை.