குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
இரயிலில் இருந்து நண்பனை தூக்கிவீசி கொன்ற பயங்கரம்; அதிரடி தண்டனை வழங்கிய நீதிமன்றம்.!
ஒடிஷா மாநிலத்தில் உள்ள சுந்தர்கஹ் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆகாஷ் தாஸ் (வயது 26), ஜித்தன் கிரி (வயது 26), அணில் குமார் (வயது 23), சுக்தேவ் கடையா (வயது 50), சோட்டு படாயக் (வயது 28).
இவர்கள் ஐவரும் தமிழ்நாட்டில் சென்டரிங் வேலை செய்துவந்த நிலையில், விடுமுறைக்காக சொந்த மாநிலம் சென்றுவிட்டு மீண்டும் 2019 டிசம்பர் மாதம் 23ம் தேதி ஒடிசாவில் இருந்து சவிதா அதிவிரைவு இரயிலில் மதுரை நோக்கி பயணம் செய்துள்ளனர்.
அப்போது, வேலைக்கு செல்ல மனமில்லாத ஆகாஷ் சொந்த ஊர் செல்வதாக தெரிவிக்க, நீ ரூ.3 ஆயிரம் முன்பணம் வாங்கி இருப்பதால் திரும்ப அனுப்ப இயலாது என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் அவர்களுக்கிடையே தகராறு எழுந்துள்ளது. இரயில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், தாழநல்லூர் இரயில் நிலையம் அருகே செல்கையில் ஆகாஷை ஆத்திரத்தில் இரயில் இருந்து வெளியே தூக்கி அனைவரும் வீசியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ஆகாஷ் நிகழ்விடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த விருத்தாச்சலம் இரயில்வே காவல் துறையினர் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை சமீபத்தில் நிறைவுபெற்ற நிலையில், நேற்று நீதிபதி பிரபா சந்திரன் தலைமையிலான அமர்வில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.