மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
288 பேரை பலிகொண்ட ஒடிசா ரயில் விபத்தில் சிதைந்த காதல்; மீட்பு பணியில் காதல் கடிதங்கள்..!!
ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில், நின்று கொண்டிருந்த சரக்கு இரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் துரந்தோ எக்ஸ்பிரஸ் இரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 288 பேர் பரிதாபமாக பலியாகினர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று, 2 தண்டவாளத்தில் இரயில்கள் இரவு 8 மணிக்கு மேல் இயக்கும் வகையில் சீரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இரயிலில் காயம் அடைந்தோரை மீட்கும் பணியின் போது, காதல் கடிதங்களும் கண்டறியப்பட்டுள்ளன. அந்த கடிதத்தில் கையால் வரைந்த ஓவியம், வண்ணத்தால் எழுதிய காதல் தகவல்கள் இருக்கின்றன. இந்த காதல் ஜோடி யார்? அவர்களின் நிலை என்ன? என்பது குறித்த தகவல் இல்லை.