நடுவானில் திடீரென ஒலித்த அலாரம் சத்தம்... பீதி அடைந்த பயணிகள்... நடந்தது என்ன.?



One of the small girl pressed warning alarm button in flight

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து 147 பயணிகளுடன் விமானம் ஒன்று சென்னை மீனம்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அதில் கவுகாத்தியை சேர்ந்த ஹேம்நாத் என்ற 65 வயது நபர் ஒருவர் தனது பேத்தி மற்றும் குடும்பத்தினர் நான்கு பேருடன் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் விமானம் ஆனது நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது திடீரென விமானி கேபினுக்கு அவசரகால எச்சரிக்கை அலாரம் ஒலித்துள்ளது.

இதனால் பயணிகள் மத்தியில் அச்சமும், சலசலப்பும் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. அதனை அடுத்து விமான பணிப்பெண்கள், ஊழியர்கள் அலாரம் சத்தத்திற்கு என்ன காரணம் என கண்காணித்துள்ளனர். அப்போது ஹேம்நாத்தின் பேத்தி அவசரகால உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடிய லைப் ஜாக்கெட்டை அணிந்திருந்தை கண்டு விமான பணிப்பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

flight

பின்னர் அந்த சிறுமியிடம் இது குறித்து கேட்ட போது தனது இருக்கைக்கு கீழே இருந்த பட்டனை விளையாட்டாக அழுத்தினேன். அதனையடுத்து இருக்கை மேலே தூக்கிப்போட்டு லைப் ஜாக்கெட் வெளியே வந்தது அதனை எடுத்து மாட்டி கொண்டேன் என சிறுமி கூறியுள்ளார். அதன் பின்னர் விமான பணிப்பெண் சிறுமியிடமிருந்த லைப் ஜாக்கெட்டை வாங்கி இருக்கைக்கு அடியில் உள்ள பாதுகாப்பு பகுதியில் வைத்து மூடினர். இதை எடுத்து சைரன் ஒலி நின்றது. இதையடுத்து பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.