2024 நாடாளுமன்ற தேர்தல்..!! மோடியை வீழ்த்த புதிய திட்டம்!!.. மம்தா பனர்ஜி மாஸ்டர் பிளான்..!!
கொல்கத்தா, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பனர்ஜியை, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ் அல்லாத எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு மாற்று கூட்டணியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, வரும் மார்ச் 23 ஆம் தேதி மம்தா பானர்ஜி ஒடிசா முதலமைச்சரும் பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக்கை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இவர்கள் மூவரும் சேர்ந்து காங்கிரஸ் அல்லாத மாற்று அணி ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து வலுவான கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வந்தன. இது குறித்து பல தலைவர்கள் பேசி வந்த போதும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதில் இழுபறி நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், காங்கிரஸ் அல்லாத எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.