#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தனது மகன்களை மணந்த மருமகள்களை லட்சக்கணக்கில் விற்ற மாமனார், மாமியார்!.
ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ5 லட்சம் வரதட்சணை கொடுக்காத மருமகள்களை ரூ1.50 லட்சத்திற்கு விற்பனை செய்த மாமனார் மற்றும் மாமியார் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள் மும்பை அருகில் உள்ள விராரைச் சேர்ந்த சகோதரர்கள் சஞ்சய் ராவல் மற்றும் வருண் ராவல் ஆகிய இரண்டு பேருக்கும் 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணமான ஆறு மாதத்தில் அவர்களிடம் கணவன் வீட்டார் ரூ9 லட்சம் வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமை படுத்தியுள்ளனர். அவர்கள் தங்களது பெற்றோரிடம் சொல்லி ரூ5 லட்சம் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தனர்.
இருப்பினும் மேலும் ரூ 5 லட்சம் வாங்கி வரும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்கள் கேட்ட பணத்தை கொண்டுவராததால் இரண்டு மருமகள்களையும் கணவன் வீட்டார் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
அதோடு அப்பெண்கள் இரண்டு பேரையும் 10 நாட்களுக்கு பிறகு மும்பைக்கு அடையாளம் தெரியாத ஒருவருடன் அனுப்பிவைத்தனர்.
அந்த நபருக்கு ரூ1.50 லட்சத்திற்கு விற்றுள்ளனர். அதனை அறிந்து அதிர்ச்சியடைந்த அப்பெண்கள், அந்த நபரிடம் இருந்து தப்பித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.