பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"என்ன கொடுமைடா இது..." ஐ போனுக்காக பெற்ற குழந்தையை விலை பேசிய பெற்றோர்... தாய் உட்பட இருவர் கைது.!
மேற்குவங்க மாநிலத்தில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக பெற்ற குழந்தையை விற்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக இரண்டு பெண்களை கைது செய்த காவல்துறை மற்றொரு நபரை தேடி வருகிறது.
மேற்குவங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் உள்ள பர்கானா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஜெய் தேவ் - ஷதி தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு எட்டு மாத குழந்தை இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பிரபலமாக வேண்டும் என்பது இந்த தம்பதியினரின் ஆசையாக இருந்திருக்கிறது.
இதற்கு நல்ல தரமான வீடியோ எடுப்பதற்காக ஐ போன் வாங்குவதற்கு தங்கள் எட்டு மாத குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்து இருக்கின்றனர் இந்த தம்பதி. இதனைத் தொடர்ந்து பிரியங்கா கோஸ் என்ற பெண்மணியிடம் தங்களது குழந்தையை விற்று கிடைத்த பணத்தில் ஐபோன் வாங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் குழந்தையின் தாய் ஷதி மற்றும் குழந்தையை வாங்கிய பிரியங்கா கோஸ் ஆகியோரே கைது செய்துள்ளனர் . மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள குழந்தையின் தந்தை ஜெய் தேவை காவல்துறை தேடி வருகிறது. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக தம்பதியினர் கைக்குழந்தையை விற்ற சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.