மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் திருமணம் செய்த மகள்: வீடு புகுந்து மகளை தூக்கிய பெற்றோர்!.. சினிமாவை மிஞ்சும் சம்பவம்..!
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் சந்திரகிரி அருகேயுள்ள பூச்சி நாயுடு பள்ளி பகுதியிலுள்ள மோகன் ரெட்டி காலனியில் வசித்து வருபவர் வம்சி கிருஷ்ணா. குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுஷ்மா. இவர்கள் இருவரும் திருப்பதியில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நட்பாக பழகி வந்த இவர்கள் இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மகளின் காதலை சுஷ்மாவின் பெற்றோர் ஏற்கவில்லை. மாறாக கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே, காதலர்கள் இருவரும் வம்சி கிருஷ்ணாவின் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது காதல் விவகாரம் தெரிந்ததில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த சுஷ்மாவின் பெற்றோர் தனது மகளை திருமணம் செய்து கொண்ட வம்சி கிருஷ்ணாவை பழிவாங்க நேரம் பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை பூச்சிநாயுடுபள்ளி கிராமத்தில் உள்ள வம்சி கிருஷ்ணா வீட்டிற்கு 5 கார்களில் சுமார் 30 பேருடன் வந்த வந்த சுஷ்மாவின் பெற்றோர், அவரது வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்ததோடு வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட அனைவரையும் தாக்கியுள்ளனர். பின்னர் சுஷ்மாவை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து வம்சி கிருஷ்ணா சந்திரகிரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அவசர அவசரமாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.